இன்று காசி விஸ்வநாதர் கோயிலில் மோடி பூஜை...

பிரதமர் மோடி வருகையை ஒட்டி, உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இன்று காசி விஸ்வநாதர் கோயிலில் மோடி பூஜை...
Published on

மக்களவை தேர்தலில், தனிப் பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றி பெற்றுள்ள பாஜக, ஆட்சியை தக்கவைத்துள்ளது. பிரதமராக 2வது முறையாக அரியணை ஏறும் மோடி, வரும் 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் ஏற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தாம் வெற்றிபெற்ற உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார். அவரை வரவேற்கும் விதமாக வீதியெங்கும் தோரணங்களும், மலர் மாலைகளும் கட்டி வாரணாசி வீதிகள் அலங்கரிக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டுள்ளன. அங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் மோடி, பூஜையில் ஈடுபடுகிறார். கோயிலுக்கு வெளியே உள்ள கட்சியினர், பொதுமக்கள், பூஜையை பார்க்கும் விதமாக எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வாரணாசி வருகையை ஒட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மோடியின் வருகையை ஒட்டி, தெருக்களிலும் சாலைகளிலும் பாரம்பரிய கலைஞர்களின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com