உணவுக்காக அடிதடி! பிரதமர் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் வெடித்த களேபரம் | Modi

x

மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் உணவுக்காக பலர் அடித்துக்கொண்ட‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போபாலில், கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்ட இந்த உச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான முதலீட்டாளர்கள், பெரு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்நிலையில், அங்கு உணவு இடைவேளையின்போது, தட்டுக்காக பலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒருவரிடம் இருந்து மற்றொருவர் பிடுங்க முயன்றபோது, கீழே விழுந்து ஏராளமான தட்டுகள் உடைந்தன. உலக முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் இப்படி ஒரு மோசமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்