`மோடி அன்பானவர்' இந்தியப் பயணம் குறித்து உஷா வேன்ஸ் நெகிழ்ச்சி
இந்தியப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது என,
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்சின் மனைவி உஷா வேன்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வேன்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வேன்ஸ், தங்கள் குழந்தைகளுடன் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவிற்கு 5 நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்தனர். பயணத்தின் ஒரு அங்கமாக பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினர். அப்போது குழந்தைகளுடன் பிரதமர் மோடி கொஞ்சி விளையாடிய காட்சிகள் பெரிதும் கவனம் பெற்றது. இந்நிலையில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு உஷா வேன்ஸ் அளித்த நேர்காணலில், இந்திய பயணத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். வெள்ளை தாடி மற்றும் வெள்ளை முடியுடன் பார்த்ததும், பிரதமர் மோடியை தங்களின் தாத்தாவாக தனது குழந்தைகள் ஏற்றுக் கொண்டதாகவும், தனது குழந்தைகள் பிரதமர் மோடியை நேசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி மிகவும் அன்பானவர்.... தாங்கள் அடுத்த பயணத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் உஷா வேன்ஸ் தெரிவித்துள்ளார்.
