அழைப்பு விடுத்த மோடி - வைரமுத்து வைத்த ரெக்வஸ்ட்
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க பிரதமருக்கு வைரமுத்து கோரிக்கை
திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலைத் திருநாள் பேருரைக்கு கருத்து தெரிவிக்க அழைப்பு விடுத்த பிரதமர் மோடிக்கு எக்ஸ் தளத்தில் கவிஞர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார். திருக்குறள் இன, மொழி, மதம் கடந்து மனிதத்தை உயர்த்தும் அறநூல் என்றும், தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட் 15, விடுதலைத் திருநாளில் இதுபோன்ற அறிவிப்பு வருமென்று ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Next Story
