3வது மாடியிலிருந்து குதித்து எம்எல்ஏ தற்கொலை முயற்சி

3வது மாடியிலிருந்து குதித்து எம்எல்ஏ தற்கொலை முயற்சி
Published on
• மகாராஷ்டிர மாநிலம், மும்பையில், அஜித் பவார் கட்சி எம்எல்ஏ, மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் பவார் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவும், துணை சபாநாயகருமான நர்ஹாரி ஜிர்வால், தங்காறு எனப்படும் சமூகத்திற்கு பழங்குடியினருக்கான கோட்டாவின் ​கீழ் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மந்த்ராலயாவின் மூன்றாவது தளத்திலிருந்து அவர் குதித்த நிலையில், அங்கு கட்டப்பட்ட வலையில் அவர் சிக்கிக் கொண்டார். இதனால், அவர் கீழே விழாமல் உயிர் தப்பினார். போலீசார் அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com