காஷ்மீர் பாரம்பரிய உடையில் உலக அழகி கரோலினா பைலாவ்ஸ்கா | Karolina Bielawska

இந்தியா வந்துள்ள உலக அழகி கரோலினா பைலாவ்ஸ்கா, காஷ்மீரின் அழகை ரசித்து மகிழ்ந்தார். போலந்தை சேர்ந்த கரோலினாவுடன் இந்தியாவை சேர்ந்த சினி ஷெட்டி, கரீபியனை சேர்ந்த எம்மி பெனா உள்ளிட்ட அழகிகளும் உடன் சென்றனர். டால் ஏரியில் படகு பயணம் மேற்கொண்டு மகிழ்ந்தனர். பின்னர், காஷ்மீர் கைவினை பொருட்களை பார்வையிட்டு, வாங்கிச் சென்றனர். காஷ்மீர் பாரம்பரிய உடையை அணிந்து கொண்டு, ஜீலம் ஆற்றின் அழகை ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அமைதியான காஷ்மீர் அழகை காணும் வாய்ப்பு கிடைத்த‌து மகிழ்ச்சி அளிப்பதாக கரோலினா பைலாவ்ஸ்கா தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com