ஹைதராபாத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு முடிசூட்டிக் கொண்ட Miss World 2025.. அட இவரா..?
ஹைதராபாத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு முடிசூட்டிக் கொண்ட Miss World 2025.. அட இவரா..?
தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசாட்டா உலக அழகியாகத் தேர்வு
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடைபெற்ற 72-ஆவது மிஸ் வேர்ல்டு உலக அழகிப் போட்டியில் தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசாட்டா சுவாங்ஸ்ரீ, (Opal Suchata Chuangsri) உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடப்பு ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி, ஹைதராபாத்தில் மே மாதம் 10ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 109 நாடுகளைச் சேர்ந்த அழகிகள், இந்தியாவுக்கு வந்திருந்தனர். சனிக்கிழமை மாலை நடந்த இறுதிச்சுற்றில், தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா சுவாங்ஸ்ரீ வெற்றி பெற்று, 2025-ம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை வென்றார். அவருக்கு 2024-இல் உலக அழகி பட்டத்தை வென்ற செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, மகுடம் சூட்டி மகிழ்ந்தார்.
