"மிஸ் வேர்ல்ட் 2025" - சொர்க்க பூமியாக மாறிய ஹைதராபாத்
2025ஆம் ஆண்டுக்கான MISS WORLD நிகழ்வு ஐதராபாத்ல கோலாகலமா தொடங்கியிருக்கு. இதுக்கான தொடக்க விழா, ஐதராபாத்ல செம்ம பிரமாண்டமா நடந்துருக்கு..
பார்வையாளர்களை வியக்குற அளவுக்கு இதோட கலை நிகழ்ச்சிகள் எல்லோரையும் பிரமிக்க வச்சது... உலக அழகி போட்டியாளர்கள் ஒவ்வொருத்தரா தங்களை INTRODUCE பண்ணாங்க...
இதுல இந்தியா சார்புல ராஜஸ்தானை சேர்ந்த நந்தினி குப்தா பங்கேற்றிருக்காங்க... இவங்க ஏற்கெனவே மிஸ் இந்தியா பட்டம் வென்றவங்க என்பது கூடுதல் ஸ்பெஷல்...
MISS WORLD நிகழ்வுக்கு வந்த பல்வேறு நாடுகள சேர்ந்த பங்கேற்பாளர்கள், ஹனமகொண்டாவுல இருக்க ஆயிரம் தூண் கோயிலுக்கு போனாங்க... இந்திய பாரம்பரிய உடை அணிஞ்சு அவங்க நடந்து வந்தது அங்க இருந்த பார்வையாளர்கள ரொம்பவே ஈர்த்துச்சு...
10 நாளுக்கு மேல நடக்க போற இந்த மிஸ் வேர்ல்ட் நிகழ்ச்சில, மே 31ஆம் தேதி MISS WORLD யார்னு ANNOUNCE பண்ணப்போறாங்க...
