மிஸ் யுனிவர்ஸ் இந்தியா- மணிகா விஸ்வகர்மா பட்டம் வென்றார்
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா- மணிகா விஸ்வகர்மா பட்டம் வென்றார்
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில், அந்த மாநிலத்தை சேர்ந்த மணிகா விஸ்வகர்மா என்ற இளம்பெண் பட்டம் வென்றார். இவர், இந்த ஆண்டு இறுதியில், தாய்லாந்தில் நடைபெறும் 74-ஆவது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார்.
மலை சிகரங்களுக்கு நடுவே கயிற்றில் நடந்து சாகசம்
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் தரையில் இருந்து 400 மீட்டர் உயரத்தில் இரு மலை சிகரங்களுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள கயிற்றின் மீது நடந்து சென்று போட்டியாளர்கள் செய்த சாகசம் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல பத்துக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டது பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.
