இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : முப்படை வீரர்களும் தீவிர கண்காணிப்பு - ராஜ்நாத்சிங் தகவல்

ஆப்கானிஸ்தானில் பதற்றம் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் முப்படை வீரர்களுக்கும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : முப்படை வீரர்களும் தீவிர கண்காணிப்பு - ராஜ்நாத்சிங் தகவல்
Published on
காஷ்மீரை மீட்க தலிபான்களின் ஆதரவை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நாடியதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரம் எல்லையில் பாகிஸ்தான் மற்றும் சீன வீரர்களின் அத்துமீறல்களும் அரங்கேற்றப்படுகின்றன. இதனால் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கேள்விகள் எழுந்த நிலையில், எத்தகைய சூழலையும் கையாள இந்தியா தயாராக இருப்பதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளுக்கு விரைவில் முடிவு வரும் என தெரிவித்த அவர், பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com