உ.பி-யில் வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த அமைச்சர்
உத்தரபிரதேசம் மாநிலம் ஜலான் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில அமைச்சர் ஸ்வதந்திர தேவ் சிங், வான்வழியாக பார்வையிட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் கனமழையால் பல மாவட்டங்களில் வெள்ள நிலைமை கடுமையாகியுள்ளது. ஜலான் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களுக்கு அமைச்சர்களை அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் அனுப்பியுள்ளார். இதன்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ஸ்வதந்திர தேவ் சிங், ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்.
Next Story
