நடுவானில் விமானம் ஜர்க்.. இறுதி நொடியில் கண்டுபிடித்த பைலட்

x

40 நிமிடங்கள் வானில் வட்டமடித்து தரையிறக்கப்பட்ட விமானம்

திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. 221 பயணிகளுடன் ஹைதராபாத் நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெங்கடகிரி அருகே, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதை சாதுரியமாக கவனித்த விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து தரையிறக்க திட்டமிட்டனர். அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் வானில் வட்டமடித்த விமானம் ரேணிகுண்டாவில் தரையிறங்கியது.


Next Story

மேலும் செய்திகள்