உலோக குப்பையில் 7 உலக அதிசயங்கள்...

டெல்லியில் உலோக குப்பையை பயன்படுத்தி, தாஜ்மகால் உள்ளிட்ட உலகின் 7 அதிசயங்கள் வடிவைமக்கப்பட்டுள்ளன.
உலோக குப்பையில் 7 உலக அதிசயங்கள்...
Published on
டெல்லியில் உலோக குப்பையை பயன்படுத்தி, தாஜ்மகால் உள்ளிட்ட உலகின் 7 அதிசயங்கள் வடிவைமக்கப்பட்டுள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில், டெல்லி மாநகராட்சி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதற்காக 7 பேர் கொண்ட குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் இதற்காக ஒரு காலி இடத்தை ஒதுக்கி, அதை பூங்காவாக மாற்றும் முயற்சியில் டெல்லி மாநகராட்சி இறங்கி உள்ளது. விரைவில் திறக்கப்பட உள்ள இந்த பூங்காவில், சூரிய சக்தி மற்றும் காற்றாலையை பயன்படுத்தி மின்வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com