3வது மாடியில் இருந்து குதித்து மனநலம் பாதிக்கப்பட்டவர் இறப்பு - போலீசார் விசாரணை

3வது மாடியில் இருந்து குதித்து மனநலம் பாதிக்கப்பட்டவர் இறந்ததால் முதியோர் காப்பகத்தில் பரபரப்பு.
3வது மாடியில் இருந்து குதித்து மனநலம் பாதிக்கப்பட்டவர் இறப்பு - போலீசார் விசாரணை
Published on
புதுச்சேரி அண்ணா நகரில் தனியார் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு முதியோர் மட்டுமின்றி மன நலம் பாதிக்கப்பட்டவர்களும் தங்கி உள்ளனர். இந்நிலையில் காப்பகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தங்கி இருந்த நாகராஜன் என்ற மன நலம் பாதிக்கப்பட்ட நபர், காப்பகத்தின் 3ஆவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜன் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தானாக கீழே விழுந்தாரா இல்லை யாராவது தள்ளி விட்டு இறந்தாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com