

மேகதாது அணை தொடர்பாக முன்னாள் முதல்வர்கள் மற்றும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர்களுடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்பை சட்டரீதியாக எதிர்கொள்வது என முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார். தமிழக அரசை அணுகி திட்டம் குறித்து தெளிவாக விளக்க முடிவெடுத்துள்ளதாகவும் மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், தங்கள் முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் டி.கே.சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார். இதனிடையே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச நேரம் ஒதுக்குமாறு, கர்நாடக அரசு கடிதம் எழுதி உள்ளது.