Delhi | Newyear Raid | புத்தாண்டு அதிரடி சோதனை.. 285 பேரை தூக்கிய டெல்லி போலீசார்..
புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் டெல்லியில் 116 ரவுடிகள் உள்பட 285க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களிடமிருந்து 27 கத்திகள், 21 நாட்டுத் துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள், 6 கிலோ கஞ்சா போதைப் பொருட்கள், 12 ஆயிரத்து 258 மது பாட்டில்கள், 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம், 310 செல்போன்கள், 231 இருசக்கர வாகனங்கள், உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
Next Story
