Meera Rice Kanji Shampoo launched | மீரா ரைஸ் கஞ்சி ஷாம்பு - கவின்கேர் நிறுவனம் அறிமுகம்

x

மீரா ரைஸ் கஞ்சி ஷாம்பு - கவின்கேர் நிறுவனம் அறிமுகம்

மீரா தயாரிப்பின் புதிய படைப்பான மீரா ரைஸ் கஞ்சி ஷாம்புவை கவின்கேர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீரா ரைஸ் கஞ்சி ஷாம்புவை, கவின்கேர் நிறுவனத்தின் வணிக நிறுவனர் ராஜட் நந்தா அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பல தலைமுறைகளாக நம் முன்னோர் இயற்கை முறையில் முடி பராமரிப்புக்கு பயன்படுத்தி வந்த அரிசி கஞ்சியைக் கொண்டு இந்த ஷாம்பு தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒரு வருடத்திற்கும் மேலாக ஆராய்ச்சி செய்து, ரைஸ் கஞ்சி மற்றும் கற்றாழையின் ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கி, இந்த ஷாம்பு தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் பல முன்னணி ஷாம்பு நிறுவனங்கள் இருந்தாலும், பாரம்பரிய முறையில், இயற்கை முறையில் தயாரித்து மக்களிடையே வழங்குவதுதான் மீராவின் சிறப்பம்சம் என்று கவின்கேர் நிறுவனத்தின் பர்சனல் கேர் மார்க்கெட்டிங் தலைவர் காயத்ரி நாதன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்