

வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிர மாநில மேலவை தேர்தலில் போட்டியிடும் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்வின் போது சரத்பவார் மகள் சுப்ரியா சூலே உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். போட்டியின்றி மேலவைக்கு உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.