Fire Accident | அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - ஜார்க்கண்டில் பரபரப்பு
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் நாலாபுறமும் சுற்றி நின்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சேத விவரம் தொடர்பாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Next Story
