Police | ECI | திடீரென உருண்டு விழுந்த பிரமாண்ட பாறைகள்.. நூலிழையில் தப்பிய தேர்தல் அதிகாரிகள்
Police | ECI | திடீரென உருண்டு விழுந்த பிரமாண்ட பாறைகள்.. நூலிழையில் தப்பிய தேர்தல் அதிகாரிகள் #Police #ECI #Rock #ViralVideo கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் செருபுழா அருகே, கல்குவாரியிலிருந்து ராட்சதப் பாறைகள் அசுர வேகத்தில் உருண்டு சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 150 மீட்டர் தூரத்திற்கு உருண்டு வந்த இந்தப் பாறைகள், மின் கம்பங்கள் மற்றும் மரங்களைச் சேதப்படுத்தியபடி மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் விழுந்தன. அப்போது அங்குப் பணியில் இருந்த மின்வாரிய ஊழியர்களும், தேர்தல் அதிகாரிகளும் 10 மீட்டர் இடைவெளியில் நூலிழையில் உயிர் தப்பினர். இந்தப் விபத்தால் ஜோஸ்கிரி பகுதிக்கான போக்குவரத்து மற்றும் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. உரியப் பாதுகாப்பு இன்றி இயங்கும் கல்குவாரியை மூட வலியுறுத்தி, அதிகாரிகள் நேரில் வரும் வரை பாறைகளை அகற்ற விடமாட்டோம் எனப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
