வானில் நிகழும் அற்புதம் | இதை மிஸ் பண்ணவே பண்ணிடாதீங்க..

x

"7ம் தேதி சந்திர கிரகணம் - சிவப்பு நிறத்தில் நிலா தெரியும்"

சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் ஏற்படும் இயற்கை வானியல் நிகழ்வு தற்பொழுது மீண்டும் நடக்கவிருக்கிறது. வரும் 7ஆம் தேதி, இரவு 9.57 மணிக்கு தொடங்கி, இரவு 1.27 வரையில் இந்த சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. இதுதொடர்பாக தந்தி டிவிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் திருநாவுக்கரசு அளித்த பிரத்யேக தகவலில், இது ஒரு அதிசய நிகழ்வு என்றும், அனைவரும் இந்த முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் காணலாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த முழு சந்திர கிரகணம் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களுக்கு மட்டுமே தென்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்