திருமணம் முடிந்து சில நிமிடங்களிலே உயிரிழந்த மணப்பெண்

திருமணம் முடிந்து அருந்ததி நட்சத்திரம் பார்க்க அழைத்து வரப்பட்ட மணப்பெண், வானத்தை பார்த்தபடியே மணமகனின் காலில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருமணம் முடிந்து சில நிமிடங்களிலே உயிரிழந்த மணப்பெண்
Published on

தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி-க்கும், ரங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ்-க்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின் அனைவரும் புகைபடங்கள் எடுத்து மகிழ்ந்துள்ளனர். அதன்பின்னர் வானத்தை நோக்கி அருந்ததி நட்சத்திரம் பார்த்து கொண்டிருந்தபோது, திடீரென்று மணப்பெண் லட்சுமி மணமகன் காலில் சுருண்டு விழுந்ததால் உறவினர்கள் பதறினர். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட லட்சுமி மாரடைப்பால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியை கேட்டு திருமண வீட்டார் துயரத்தில் ஆழ்ந்தனர். மகிழ்ச்சியுடன் புது வாழ்கையை துவங்கிய மணப்பெண் நொடி பொழுதில் வாழ்க்கை முடிந்து இயற்கை எய்திய சம்பவம் தெலங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com