காதலிக்கு திருமணம் - தற்கொலைக்கு முயன்ற காதலன்

x

உத்தரப் பிரதேசத்தில் காதலிக்கு அவரது பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க முயன்றதால் காதலன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

முஸஃபர்நகர் பகுதியில் உள்ள காசம்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அர்ஜூன் அதே பகுதியை சேர்ந்த பெண்னை காதலித்து வந்தார். இந்நிலையில் அப்பெண்ணுக்கு பெற்றோர் வேறு நபருடன் நிச்சயம் செய்ததை தொடர்ந்து விரக்தி அடைந்த அந்த இளைஞர் உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார்.

பின்னர் காவல்துறையினர் வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் தன் கோரிக்கையை நிறைவேறும் வரை கீழே இறங்க மறுத்தார். தொடர்ந்து காதலியை வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளைஞர் கீழே இறங்கி வந்தார்.


Next Story

மேலும் செய்திகள்