Marriage Death கல்யாண வீட்டில் `சரக்கு’ என்று நினைத்து எடுத்து குடித்ததால் 4 பேர் துள்ளத்துடிக்க பலி

`சரக்கு’ என்று நினைத்து எடுத்து குடித்ததால் 4 பேர் துள்ளத்துடிக்க பலி

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் நச்சு ரசாயனத்தை மதுபானம் என நினைத்து குடித்த நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அலோலி கிராமத்தைச் சேர்ந்த சுஷிலா, ஜம்னி, பதாமி மற்றும் ரத்தன் ஆகியோர் திருமண நிகழ்ச்சியில் பாத்திரம் கழுவ வைக்கப்பட்டிருந்த ரசாயனத் திரவத்தை மதுவென நினைத்து எடுத்துச் சென்று அருந்தியுள்ளனர். அதனை குடித்த சில நிமிடங்களிலேயே உடல்நிலை மோசமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நால்வரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com