"இதெல்லாம் பாலியல் வன்கொடுமை ஆகாது" - கேரள ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
திருமணம் செய்யவில்லை என்பதற்காக இருவருக்கு இடையேயான பாலியல் உறவை வன்கொடுமை என கருத முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய அஜித் என்ற இளைஞரின் மனுவை பரிசீலித்த அம்மாநில உயர்நீதிமன்றம், தனிப்பட்ட வெறுப்பைத் தீர்த்துக்கொள்ள போலி பாலியல் வன்கொடுமை புகார்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்தது. திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்காக இரண்டு நபர்களுக்கு இடையேயான பாலியல் உறவை பாலியல் வன்கொடுமை என்று கருத முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அஜித் மீதான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் ரத்து செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Next Story
