Maoist Surrender | `6 கோடி’ விலை வைக்கப்பட்ட நக்சல் தளபதி `தலை’ - `60 தலை’களுடன் வந்து சரணடைவு

x

மகாராஷ்டிராவின் காட்சிரோலி மாவட்டத்தில், நக்சல் தலைவன் மல்லோஜுலா வேணுகோபால் ராவ் உட்பட 61 நக்சலைட்டுகள் மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் முன்னிலையில் போலீசாரிடம் சரணடைந்தனர். வேணுகோபால் பற்றி துப்புக்கொடுப்பவர்களுக்கு, அரசு 6 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்திருந்த நிலையில், அவர் சரணடைந்ததுள்ளார். அவருடன் சேர்ந்து 60 நக்சல்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்துள்ளனர். ஏ.கே 47 உட்பட 54 ஆயுதங்களை ஒப்படைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்