50 கி.மீ தூரத்திற்கு ஒரு இடத்தில் பாஸ்போர்ட் பெறும் வசதி

50 கிலோமீட்டர் தூரத்திற்குள்ளாக ஒவ்வொரு இடத்திலும் பாஸ்போர்ட் விண்ணப்ப படிவம் வழங்க 214 தபால் நிலையங்கள் செயல்பட உள்ளதாக மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
50 கி.மீ தூரத்திற்கு ஒரு இடத்தில் பாஸ்போர்ட் பெறும் வசதி
Published on

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை அஞ்சல் நிலைய புதிய கட்டிடத்தை மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், பிரதமர் வழங்கிய திட்டத்தில் அடிப்படையில் , 300 தபால் நிலையங்கள் பாஸ்போர்ட் வழங்க கூடிய நிலையங்களாக உருவாக்கபட்டுள்ளது என்றார் . 50 கிலோமீட்டருக்கு ஒரு இடத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் வழங்க 5 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் 214 தபால் நிலையங்களில் நாடு முழுவதும் நடைபெற்று வருவதாகவும் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com