Manipur | மியான்மர் எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த அதிர்ச்சி

Manipur | மியான்மர் எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த அதிர்ச்சி
Summary

மணிப்பூரில் 11 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை கடத்தி வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சுராசந்த்பூர் மாவட்டத்தில் மணிப்பூர் காவல்துறை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படைகள்{ இணைந்து நடத்திய சோதனையில், ஒரு வாகனத்தின் ரகசிய அறையிலிருந்து 474 பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றிற்குள் இருந்த சுமார் 5 புள்ளி 42 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. மியான்மர் எல்லையிலிருந்து கடத்தி வரப்பட்ட இந்தப் போதைப்பொருள் நாட்டின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கைதான மூன்று பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com