ஆலங்கட்டி மழை - இன்றும், நாளையும் விடுமுறை | manipur

மணிப்பூரில் ஆலங்கட்டி மழை பெய்து வரும் நிலையில், கடுமையான வானிலை காரணமாக இன்றும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில முதல்வர் பிரேன் சிங் உத்தரவிட்டுள்ளார்...முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதென அவர் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்... மேலும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்... பொதுமக்களைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்... பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களுக்கான உதவி எண்களையும் அவர் அறிவித்தார்,,,

X

Thanthi TV
www.thanthitv.com