தீக்குழிக்குள் சிக்கி துடித்த நபர் - சிகிச்சை பலனின்றி பலி
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம், எர்ரகுடி (yerragudi) கிராமத்தில் நடந்த திருவிழாவில், தீக்குழிக்குள் விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மோகரம் விழாவின் ஒரு பகுதியாக நடந்த ஹலாய் ஆட்டத்தின் போது, தக தகவென எரிந்து கொண்டு இருந்த தீக்குழிக்குள் ஹனுமந்த் என்ற நபர் சிக்கிக் கொண்டார். கொளுந்துவிட்டு எரிந்த நெருப்பில், அவர் துடி துடித்து எரிந்த நிலையில், உடலில் 90%-க்கும் அதிகமான தீக்காயத்துடன் மீட்கப்பட்டார். பின்பு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Next Story