மனைவியை, அண்ணனுக்கு விற்ற கணவன்

ஆந்திராவில், பணத்திற்காக பெற்ற பிள்ளைகளையும், மனைவியையும் விற்ற கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை, அண்ணனுக்கு விற்ற கணவன்
Published on

ஆந்திர மாநிலம் கொவளகுண்டாவைச் சேர்ந்தவர் மத்திலெட்டி.... இவருக்கு நான்கு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். மத்திலெட்டி, மதுபோதைக்கு அடிமையாகி பல இடங்களில் கடன் வாங்கி உள்ளார். கடன் பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு பிறந்த குழந்தையை 1 லட்சம் ரூபாய்க்கு இவர் விற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 15 லட்ச ரூபாய் கடனுக்காக தனது மனைவி மற்றும் குழந்தைகளை 5 லட்ச ரூபாய்க்கு தனது அண்ணனிடம் விற்று ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மனைவி வெங்கடம்மாவை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார் . இதனால் மனம் வெறுத்துப் போன வெங்கடம்மா, குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார் . பின்னர் அவர் குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அதிகாரிகளிடம் தனது கணவர் குறித்து புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மத்திலெட்டியை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com