பிட்புல் நாயை கடிக்க விட்டு ரசித்த மனித மிருகம் - கைதுசெய்த மறுநாளே ஜாமின்..

x

சிறுவனை நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்த கொடூரம் - பரபரப்பு காட்சி

மும்பை அருகே 11 வது சிறுவனை ஆட்டோவிற்குள் அடைத்து வைத்து, நாயை விட்டு கடிக்க வைத்து ரசித்தவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மன்குர்த் பகுதியில் சோஹைல் கான் (Sohail Khan) என்ற நபர் தனது பிட்புல் வகை (pitbull) நாயை ஏவிவிட்டு 11 வயதே ஆன ஹம்சா என்ற சிறுவனை கடிக்க வைத்து உள்ளார். இதில், நாயால் கடிபட்டு சிறுவன் கதறி துடித்ததைக் கண்டு ரசித்தபடி அவர் சிரித்துள்ளார். நாய் கடித்ததில் சிறுவனின் கை, தாடை உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சோஹேல் கான் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்