உ.பி.,யில் ஜன்னல் வழியே திருட முயன்றவர் மின்சாரம் தாக்கி பலி

உ.பி.,யில் ஜன்னல் வழியே திருட முயன்றவர் மின்சாரம் தாக்கி பலி

உத்தர பிரதேசத்தில் வீட்டின் ஜன்னல் துவாரம் வழியாக உள்ளே நுழைந்து திருட முயன்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

காசியாபாத் நிவாரி பகுதியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில், குளியலறை ஜன்னல் வழியாக திருட முயன்ற இளைஞர், அருகே சென்ற 11,000 வோல்ட் உயர் அழுத்த மின்கம்பியில் உடல் உரசியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜன்னலில் சடலம் தொங்குவதை கண்ட வீட்டின் உரிமையாளர் அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com