மூளை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் பலி...

மூளை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நடராஜ் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மூளை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் பலி...
Published on
கேரளாவில் பணிபுரிந்து வந்த கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவர், காய்ச்சலால் அவதிப்பட்டதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளின் பரிசோதனை முடிவில் நிபா வைரஸ் அறிகுறிகள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் நடராஜ் மூளை காய்ச்சல் அறிகுறி கண்டறிப்பட்டது. இதனைதொடர்ந்து நடராஜனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மூளை காய்ச்சலுடன் நோய்தொற்று ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com