BMW கார் மோதி கோர மரணம் - மத்திய நிதித்துறைக்கு பேரிழப்பு
டெல்லியின் மத்திய நிதித்துறை துணை செயலாளர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய நிதி அமைச்சக துணை செயலாளராக பணியாற்றியவர் நவ்தோஜ் சிங். இவர் தனது மனைவி சந்திப் கவுருடன் குருத்துவாராவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த நிலையில், BMW கார் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இவரது மனைவி சந்திப் கவுர் படுகாயமடைந்த நிலையில், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Next Story
