இளம் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து பதிவேற்றிய நபர் கைது
இளம் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து பதிவேற்றிய நபர் கைது
பெங்களூரு பனசங்கரி பகுதியில், இளம்பெண்களை ஆபாசமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதான குருதீப் சிங் என்ற அந்த நபர் கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. வேலை தேடி வந்த இடத்தில் இவ்வாறு அவர் இளம்பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இதனை சமூக வலைதளத்தில் பார்த்த பெண் போலீசாரை டேக் செய்து பகிர்ந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Next Story
