காஸியாபாத்|உ.பி.யில் உறவினரை சுத்தியலால் தாக்கிய நபர் கைது

உ.பி.யில் உறவினரை சுத்தியலால் தாக்கிய நபர் கைது

உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத் விஜயநகர் பகுதியில், தனது மனைவியிடம் தவறான நோக்கத்துடன் பழகியதாகச் சந்தேகித்து உறவினரை சுத்தியலால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார். சராஃபா சந்தையில் மளிகைக் கடை முன்பு பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த நிஷாந்த் என்பவரை, பின்னால் வந்த ரிக்கி சுத்தியலால் 5 முறை தலையில் தாக்கிவிட்டுத் தப்பியோடினார். இதில் பலத்த காயமடைந்த நிஷாந்த், யசோதா மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட ரிக்கியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி தொடர்பான சந்தேகமே தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

X