

தேர்தல் ஆணையத்தை உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். மேற்கு வங்க சட்டசபையில் பேசிய அவர், மேற்கு வங்கத்திற்கு முதுகெலும்பு உள்ளது என்றும் ஒருபோதும் தலை வணங்காது என்றும் கூறினார். மேலும் தேர்தலின் போது சதிதிட்டம் நடந்துள்ளது எனக் குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, அனைத்து மத்திய அமைச்சர்களும் இங்குதான் முகாமிட்டு இருந்தார்கள் என்றும் பணத்தை அள்ளி இறைத்தனர் என்றும் கூறினார்.