விடிய விடிய நடந்த போதை பார்ட்டி..திடீர் என்ட்ரி கொடுத்த போலீஸ்..வசமாக சிக்கிய மஞ்சும்மெல் பட நடிகர்

கேரளா மாநிலத்தை சேர்ந்த பிரபலா தாதாவான் ஓம் பிரகாஷ் என்பவர் கொச்சியில் ஒரு 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அறைகளை வாடகைக்கு எடுத்து, போதை பார்ட்டி நடத்தியதாக கூறப்படுகிறது. அதில் எம்டிஎம்ஏ,

கொகைன் உள்பட போதைப் பொருட்கள் பரிமாறப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் போதை பார்ட்டி நடந்தது உறுதி செய்யப்பட்டு, அறையிலிருந்து

விலை உயர்ந்த வெளிநாட்டு மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன. தாதா ஓம்பிரகாஷ், அவரது கூட்டாளியான ஷிஹாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களிடம்

நடத்திய விசாரணையில் போதை பார்ட்டியில் பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி, நடிகை பிரயாகா மார்ட்டின் உள்பட சில முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டது தெரியவந்தது. இது பற்றி நடிகர் ஸ்ரீநாத் பாசி மற்றும்

நடிகை பிரயாகா மார்ட்டினிடம் விரைவில் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர். இவர்களை ஓட்டலுக்கு அழைத்துச் சென்றது பினு ஜோசப் என்பவரை கைது செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com