ஹைதராபாத்தில் ஒருங்கிணைந்த உற்பத்தி அலகை தொடங்கிய மலபார் குழுமம்

x

தங்க நகை விற்பனையில் சர்வதேச அளவில், 5-வது இடத்தில் இருக்கும் மலபார் கோல்ட் அன்ட் டைமன்ட்ஸ் (Malabar Gold & Diamonds) நிறுவனம், ஒருங்கிணைந்த உற்பத்தி அலகை, தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தொடங்கி உள்ளது.

ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 3.45 லட்சம் சதுர அடி பரப்பளவில் தொடங்கப்பட்டுள்ள இந்த உற்பத்தி அலகு, நாடு முழுவதும் உள்ள 14 உற்பத்தி அலகுகளை ஒருங்கிணைத்து செயல்படும்.

இந்த ஒருங்கிணந்த உற்பத்தி அலகை, மலபார் குழுமத் தலைவர் எம்.பி. அகமது முன்னிலையில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி திறந்து வைத்தார். இந்த உற்பத்தி அலகில் இருந்து, ஆண்டுக்கு 4.7 டன் தங்க நகைகள், 1.8 லட்சம் காரட் வைர நகைகளைத் தயாரிக்க முடியும். அத்துடன் 78 டன் தங்க நகைகளை சுத்திகரிப்பு செய்யும் முடியும்.


Next Story

மேலும் செய்திகள்