பராமரிப்பு மையத்தில் குழந்தையை தாக்கிய பணிப்பெண் கைது
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், பெண் குழந்தையை பணிப்பெண் ஒருவர் தாக்கிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.
வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் வசதிக்காக, பகல்நேர குழந்தை பராமரிப்பு மையங்கள் செயல்படுகின்றன. அந்த வகையில், நொய்டாவில் உள்ள தனியார் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில்
15 மாத பெண் குழந்தை தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் ஆத்திரமடைந்த சோனாலி என்ற பெண் ஊழியர், அறையின் கதவை மூடிவிட்டு குழந்தையை கொடூரமாக தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story
