50 வயதில் ரகசிய திருமணம் செய்த மஹுவா மொய்த்ரா

x

50 வயதில் திருமணம் செய்த திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணா நகர் தொகுதி எம்.பி. மஹுவா மொய்த்ரா, ஜெர்மனியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் எம்பி பதவி பறிக்கப்பட்டு முந்தைய ஆட்சியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிட்டு மஹுவா மொய்த்ரா வெற்றி பெற்றார். 50 வயதாகும் மொய்த்ரா, 65 வயதாகும் பினாகி மிஸ்ரா என்பவரை ஜெர்மனியில் ரகசியமாக திருமணம் செய்துள்ளார். கடந்த மே 30ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மிஸ்ராவும், தானும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள மொய்த்ரா, அனைவருடைய அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். பிஜு ஜனதா தள கட்சி எம்பி-யாக இருந்த பினாகி மிஸ்ராவுக்கு, ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்