புதுச்சேரி முதலியார்பேட்டை காவல்நிலையம் அருகே சுற்றித்திரிந்த 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, போலீசாரால் மீட்கப்பட்டு தனியார் முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். மூதாட்டியிடம் விசாரித்ததில், அவர் மகாராஷ்டிரா மாநிலம் குரோ என்ற கிராமத்தை சேர்ந்த ஜெயநூர் என்பதும், அவருக்கு 2 மகன்கள் 3 மகள்கள் இருப்பதும், குடும்பத்தினர் மீதான வெறுப்பால் 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, பல ஊர்களுக்கு சென்று பிச்சை எடுத்து பிழைத்து வந்ததும் தெரியவந்தது.