Maharashtra ஹோட்டல் ரூம் டோரை மாற்றி தட்டிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...உள்ளிருந்து வந்த மிருகங்கள்
ஹோட்டல் ரூம் டோரை மாற்றி தட்டிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... உள்ளிருந்து வெளிவந்த மிருகங்கள்
மகாராஷ்டிராவில் ஹோட்டல் ரூம் கதவை மாற்றி தட்டிய பெண், போதை இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சத்திரபதி சம்பாஜி நகரை சேர்ந்த மூன்று இளைஞர்கள் தனியார் ஹோட்டலில் ரூம் எடுத்து மது அருந்தியுள்ளனர். அதே ஹோட்டலுக்கு தனது பெண் தோழியை பார்க்க 30 வயது பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் தனது தோழியின் அறைக்கு பதிலாக குடிகார இளைஞர்களின் அறை கதவை தட்டிவிட்டார். தவறை உணர்ந்து அந்த இடத்தை விட்டு நகர முயற்சிக்கையில், போதை இளைஞர்கள் அந்த பெண்ணை உள்ளே இழுத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரில் மூன்று போதை இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.
Next Story
