Maharashtra | போதையில் டெம்போ ஓட்டிவந்த இளைஞர்.. தடுத்த போலீசுக்கு அடி.. எட்டி உதைத்த வீடியோ வைரல்
மகாராஷ்டிராவில், டெம்போ ஓட்டுநர் ஒருவர் போக்குவரத்து போலீசாரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்யாண் என்ற பகுதியில், மது அருந்திவிட்டு டெம்போ வாகனத்தை ஓட்டிய மகேஷ் என்பவரை, போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். மதுபோதையில் இருந்ததால் வாகனத்தை தொடர்ந்து ஓட்டுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும், வழக்குப்பதிவு செய்யப்போவதாகவும் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், போலீசாரை எட்டி உதைத்து தாக்கியுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
