Maharashtra | Onion Price | 750 கிலோ வெங்காயத்தை வெறும் ரூ.665-க்கு விற்ற விவசாயி
மகாராஷ்டிராவில் 750 கிலோ வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயி, வெறும் 665 ரூபாய்க்கு விலை போனதால், வேதனை அடைந்தார். புரந்தர் பகுதியைச் சேர்ந்த சுதாம் என்ற விவசாயி, 66 ஆயிரம் ரூபாய் செலவு செய்து வெங்காயம் பயிரிட்ட நிலையில், கனமழையால் சேதமடைந்தது. எஞ்சிய 750 கிலோ வெங்காயத்தை விற்பனைக்காக எடுத்து வந்த அவருக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. மொத்தமாக 665 ரூபாய்க்கே விலைபோனதால், ஒரு கிலோ வெங்காயம் 88 பைசாவிற்கே விற்பனையானது.
Next Story
