

மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. துலே பகுதி டைட்டான் கிராமத்தில், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. திடீரென பெருக்கெடுத்த வெள்ளத்தில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சிக்கினர். அவரை அங்கிருந்த கிராம மக்கள் காப்பாற்ற முயன்றனர். எனினும் அவர், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்