ஆண்களுக்கு ரூ.1500 உரிமை தொகை கொடுத்த மகாராஷ்டிரா அரசு... இதுதான் இப்ப நாடு முழுவதும் வைரல்
ஆண்களுக்கு ரூ.1500 உரிமை தொகை கொடுத்த மகாராஷ்டிரா அரசு... இதுதான் இப்ப நாடு முழுவதும் வைரல்
மகாராஷ்டிராவில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 12 ஆயிரத்து 431 ஆண்களுக்கு மாதம், மாதம் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிய வேளையில், அவசர அவசரமாக மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட்டது.
அப்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தொடங்கிய திட்டத்தில், 2.41 கோடி பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டது.
இதுல ஹைலைட்டாக பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்பட்டிருக்கிறது என்ற அதிர்ச்சி ஆர்.டி.ஐ. தகவல் வெளியாகியிருக்கிறது.
மகளிர் உரிமை தொகை தொடர்பான ஆர்.டி.ஐ. கேள்விக்கு, அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை பதில் அளித்திருக்கிறது.
அதில், மகளிருக்காக தொடங்கப்பட்ட திட்டத்தில் 12 ஆயிரத்து 431 ஆண்கள் பயனாளிகளாக இருந்திருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு 13 மாதங்கள் மாதம் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படி மொத்தமாக 24.24 கோடி ரூபாய் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஜூலை மாதம் பயனாளிகளின் வங்கி கணக்குகள் பரிசோதிக்கப்பட்ட போதுதான் அவர்கள் ஆண்கள் என தெரியவந்திருக்கிறது. இதனையடுத்தே உதவித்தொகை நிறுத்தப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பான செய்தி, கேலியான விமர்சனங்களோடு இணையத்தில் பரவி வருகிறது. பலரும், பயனாளிகளோட பேரை கூட பாக்கலியா ஆபிசர் என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.
