Maharashtra |வீடு தேடி சென்று காங்.நிர்வாகிக்கு புடவை கட்டிவிட்ட பாஜக நிர்வாகிகள்-மும்பையில் கொடூரம்
காங். நிர்வாகிக்கு புடவை அணிவித்த பாஜக நிர்வாகிகள்
மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு புகைப்படம் பதிவிட்ட காங்கிரஸ் நிர்வாகிக்கு பாஜக நிர்வாகிகள் புடவை அணிவித்தனர்.
மும்பையை அடுத்த டோம்பிவ்லி பகுதியில் 73 வயதாகும் காங்கிரஸ் நிர்வாகி பிரகாஷ் பாக்ரி, சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோதி புடவை அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகிகள், மாவட்ட தலைவர் நந்து பாரப் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகி வீட்டுக்கு சென்று, அவருக்கு புடவை அணிவித்தனர்.
Next Story
