

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டப்பேரவைகளுக்கு நடந்த தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில், மகாராஷ்டிர மாநிலத்தில் தொடக்கத்தில் இருந்தே பாஜக, சிவசேனா கட்சிகள் முன்னிலை வகித்தன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில், தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க., சிவசேனா கூட்டணி 155 இடங்களிலும், காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 100 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. அதில், பாஜக 98 இடங்களிலும், சிவசேனா 58 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 56 இடங்களிலும் காங்கிரஸ் 44 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. சுயேச்சை மற்றும் இதர கட்சிகள் 33 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர். ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்பதால், பாஜக, சிவசேனா கூட்டணியே மீண்டும் அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது. சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே குடும்பத்தின் செல்வாக்கால், இந்த வெற்றி சாத்தியமாகி உள்ளது. பால் தாக்கரேயின் மகனும் சிவசேனா கட்சியின் தற்போதைய தலைவருமான உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோரின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. முதன் முறையாக களம் இறங்கியுள்ள பால் தாக்கரே பேரன் ஆதித்யா தாக்கரே மும்பை வொர்லி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.